First World War Impacts In India

                   First World War Impacts In India



முதல் உலகப் போரின் தாக்கம்:


First World_War Impact

• இந்தியாவில் தொழிற்சாலைகள் வளர ஆரம்பித்த காலகட்டம் (1914 - 1918).

 காரணம்: 
• போர்கால கருவிகளை தயாரிக்க இது வழிவகை செய்தது.
• போர் முடிவடைந்ததால் போர்க்கால தேவைகளும் குறைந்தன.
• தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. அதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
• சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைக்க முன் முயற்சி மேற்கொண்டவர்கள் - - - - -
- - - - பி. பி வாடியா, ம. சிங்காரவேலர், திரு. வி கல்யாண சுந்தரம்.

சென்னை தொழிலாளர் சங்கம்:
 (madras labour Union)

• இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்.
• 1918 இல் அமைக்கப்பட்டது.
• அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - பம்பாய் (31 - அக்டோபர் 1920)
• சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் - - - - - - - - - -
 - - - ம. சிங்காரவேலர் (1860 - 1946)
• இவர் பௌத்தத்தை பரிந்துரை செய்தவர்.
• பல மொழிகள் கற்றறிந்தவர்.
• காரல் மார்க்ஸ் , சார்லஸ் டார்வின், ஹேர்பர்ட் ஸ்பென்சர், ஐன்ஸ்டீன் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர்.
• 1923 இல் முதன்முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் இவரே.
• இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
• தொழிலாளி வர்க்கத்தின்  பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காக தொழிலாளர் (worker) என்ற பத்திரிகையை வெளியிட்டார்.
• பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.


பெண்கள் இயக்கங்கள்:

• தமிழ்நாட்டில் உருவானது இந்திய பெண்கள் சங்கம். (WIA- women's India Association)
•ALWC- all India Women's conference
• இந்திய பெண்கள் சங்கம் அன்னிபெசன்ட் , டோரதி ஜீனராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பட்டது. (1917)
• இது வாக்குரிமை, தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
• இச்சங்கம் பெண் கல்வி குறித்த பிரச்சினைகளை கையாள்வதற்காக 1927 இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.
• அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது.
• இவ்வியக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய சில பெண்கள் - முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் ராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலுமங்கை, தாயாரம்மாள் நிலாம்பிகை, சிவகாமி சிதம்பரனார்.
• தேவதாசி முறை ஒழிப்பு - முத்துலட்சுமி அம்மையார்.
• “ மதராஸ் தேவதாசி சட்டம் 1947” (அர்ப்பணிப்பை தடுத்தல்) எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.
• இச்சட்டத்தை முதலில் மசோதாவாக சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் நடைமுறைப்படுத்திய வருடம் - 1930.
• இச்சட்டம் “ பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும் அறிவித்தது.
• தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்காக சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது.
• தேவதாசி முறைக்கு உதவி செய்கிற, தூண்டிவிடுகிற, குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது.


‣ இராமலிங்க அடிகளார்:

• இவர் வள்ளலார் என்றும் அழைக்கப்படுகிறார்.
• 1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
• பின்னர் அது 1865 இல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (இது சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு)
• பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார்.
• ஏழைகளுக்கு உணவு அளிப்பதே சிறந்த வழிபாடு என உறுதியாக நம்பினார்.
• 1866 இல் தென்னிந்தியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இதனால் 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
• 1872 or 1870 இல் சத்திய ஞான சபையை கட்ட தொடங்கினார்.
• இது தியானம் செய்வது சிறந்த வழிபாடு என்பதற்காக கட்டப்பட்டது.
• இங்கு வழிபாடு கூட்டங்கள் மத வேறுபாடின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.
• கடவுளை ஜோதி வடிவமாக வழிபடலாம் என்று அவர் கூறினார்.
• வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையலாம் என்று உறுதியான எண்ணம் கொண்டிருந்தார்.
• ஜீவகாருண்யம் என்பது பூச்சிகள் தாவரங்கள் விலங்குகள் பறவைகள் அனைத்து உயிரினங்களிலும் அன்பு செலுத்துவது.
• ' வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார்.
• உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தார்.
• சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
• ' மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி' என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும்.
• கடவுள் கருணை மற்றும் அறிவு வடிவமாக திகழ்கின்றான். ஆகவே கடவுளை அடையும் வழி உயிர்களிடத்தில் காட்டும் கருணையும் இரக்கமும் ஆகும் என்று குறிப்பிட்டார்.
• அவருடைய தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாக புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ' மருட்பா ' அறியாமையின் பாடல்கள் என கண்டனம் செய்தனர்.
• இவர் இயற்றிய நூல்கள் - திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம் ஜீவகாருண்யம்.


‣  வைகுண்ட சுவாமிகள்:

• பிறந்த ஊர் - - கன்னியாகுமரிக்கு அருகில் இன்று சாமிதோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தா கோவில் என்னும் கிராமம். (1809)
• இவரின் இயற்பெயர் - முடிசூடும் பெருமாள்.
• இந்தப் பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினர்.
• திருவிதாங்கூர் அரசின், உயர் சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே அனைவரும் சமம் என்னும் கருத்தினை போதித்தார்.
• வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசின் ஆட்சியையும் முறையே “ வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும்” கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும்” விமர்சித்தார்.
• 1833ஆம் ஆண்டு சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்காக, சமூக ஒருங்கிணைப்பு - சாமிதோப்பில் தனது தியானத்தை  துவக்கினார். துறவியைப் போன்று வாழ்ந்தார்.
• வைகுண்ட சுவாமிகள் உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
• விலங்குகளை வணங்குவதையும் அவர் நிராகரித்தார்.
• விலங்குகளை பலியிடுவதற்கு எதிராக இயக்கம் நடத்தினார்.
• சமத்துவ சமாஜம் - - - -  பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்கு வைகுண்ட சுவாமிகள் ஏற்படுத்திய இயக்கம்.
• சமபந்தி உணவு முறையை நடத்தினார்.
• திருவிதாங்கூர் அரசால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் தனது கொள்கைகளை விட்டுத் தரவில்லை.
• அவரை பின்பற்றியவர்கள் அவரை அய்யா ( தந்தை ) என அழைத்தனர்.
• அவருடைய சமய வழிபாட்டு முறை
“ அய்யாவழி ” என்று அறியப்பட்டது.
• 19ஆம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் அய்யாவழி ஒரு தனிப்பட்ட சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இது தென் திருவாங்கூர் மற்றும் தெற்கு திருநெல்வேலி பகுதிகளில் வேகமாக பரவியது.
• அவருடைய அறிவுரைகள் நீதிக்குப் புறம்பான சமூக பழக்கவழக்கங்களில் இருந்தும் மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவித்தது.
• அவருடைய கருத்துக்கள் ஒரு நூலாக திரட்டப்பட்டுள்ளது . அந்த நூலின் பெயர் - - - - - - - - - அகிலத்திரட்டு.
• அவர் இயற்றிய சமய நூல்கள் - - - அகிலத்திரட்டு, அம்மானை, அருள்நூல். • (இந்த நூல்கள் அவரது மறைவுக்குப் பின்பு மற்றும் அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அய்யாவழி சமயம் பரவியது.)
• பல இடங்களில் ' நிழல் தங்கல்' என்ற வழிபாட்டுத்  தலங்கள் கட்டப்பட்டன.



‣ அயோத்திதாசர்: (1845 - 1914)

• தமிழறிஞர், சித்தமருத்துவர், பத்திரிக்கையாளர் , சமூக அரசியல் செயல்பாட்டாளர்.
• சென்னையில் பிறந்தவர்.
• தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
• அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். (ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்கு தொடங்கப்பட்ட அமைப்பு)
• 1882ல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் “ திராவிடர் கழகம்” என்னும் அமைப்பை நிறுவினார்.
• 1885 இல் “ திராவிட பாண்டியன்” என்னும் இதழையும் தொடங்கினார்.
• 1891 இல் “ திராவிட மகாஜன சபை” என்ற அமைப்பை நிறுவினார். இதன் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
• 1907 இல் “ ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிக்கையை தொடங்கி அதை 1914 இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.
• 1898 இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.
‣ ( இதற்கு காரணம் பிரம்மஞான சபை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல்  H. S. ஆல்காட் என்பவர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே)
• 1898 இல் “ சாக்கிய பௌத்த சங்கம்” எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார். இது பகுத்தறிவின் அடிப்படையில் சமய தத்துவத்தை கட்டமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
• பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.
• ஒடுக்கப்பட்டவர்களை ' சாதி பேதமற்ற திராவிடர்' என அழைத்தவர் இவரே.
• மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அவர்களை “ சாதியற்ற திராவிடர்கள் ” என பதிவு செய்யுமாறு வற்புறுத்தினார்.

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2