INDIA BUDGET IN 2020

INDIA BUDGET IN 2020 (இந்திய பட்ஜெட்)


ஒரு ரூபாயில் வரவு - செலவு திட்டம்

வரவினங்கள்

  1. நிறுவன வரி-18
  2. வருமான வரி-17
  3. சுங்க வரி        -4
  4. கலால் வரி     - 7
  5. சரக்கு மற்றும் சேவை வரி -18
  6. வரி சாரா வருவாய்   - 10
  7. கடன் சாரா மூலதன வரவு -6
  8. கடன் தொகை          -20

செலவினங்கள்

  1. மத்திய அரசு உதவியுடனான திட்டங்கள்- 9
  2. மத்திய அரசின் நேரடித் திட்டங்கள்- 13
  3. வட்டி செலுத்துகை-18
  4. பாதுகாப்புத் துறை-8
  5. மானியங்கள்- 6
  6. நிதிக் குழு மானியங்கள் -10
  7. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு- 20
  8. ஓய்வூதியம்   -  3
  9. இதர செலவினங்கள் - 10


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நேரம் 45 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

முக்கிய அம்சங்கள்

  1. வருமான வரி தாக்கலுக்கு புதிய வழிமுறை
  2. குறைந்த விலை வீட்டுக் கடனுக்கு வட்டி சலுகை நீட்டிப்பு.
  3. தனியார் ஒத்துழைப்பில் 150 ரயில்கள் 
  4. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகம்.
  5. எல்ஐசி பங்குகள் விற்பனை
  6. வங்கி வைப்பு நிதிக்கு ரூ.5 லட்சம் காப்பீடு.
  7. விவசாயிகள் நலன் காக்க 16 அம்ச செயல் திட்டம்.
  8. விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.3,797 கோடி.
  9. 2021-க்குள் 2.6 லட்சம் புதிய அரசு வேலைகள்.
  10. 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 விமான நிலையங்கள்.
  11. எளிமையாகிறது ஜிஎஸ்டி தாக்கல்.

திருக்குறள்


“ பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கு   இவ்வைந்து.”

விளக்கம்:
நோயற்ற வாழ்வு , விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்பநிலை , உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு அழகு என்பது இதன் விளக்கம்.

நோயற்ற வாழ்வுக்காக ஆயுஸ்மான் பாரத் திட்டம், விவசாயிகளின் நலனுக்காக pm-kisan திட்டம், பொருளாதார நடவடிக்கைகள், தேச பாதுகாப்பு, அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வாழ்க்கை முறை இவை ஐந்தும் கொண்ட நாடகா நமது இந்தியா உள்ளது.

ஆத்திச்சூடி

“ பூமி திருத்தி உண்”

விளக்கம்: நிலத்தைப் பண்படுத்தி அதில் பயிர் செய்து விளைந்த நெல்லை உண்ணவேண்டும் என்பதேயாகும்.


வேளாண்துறை


1. வேளாண்கடன்கள் இலக்கு-ரூ.15 லட்சம் கோடி,
2. விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேயின் அரசு தனியார் ஒத்துழைப்பில் 'கிசான் ரயில்' திட்டம்.
3. விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் 'கிசான் உடான்' திட்டம்.
4. சூரியசக்தியில் இயங்கும் பம்புகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி.
5. பால் பதப்படுத்துவதற்கான திறனை 2025-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குதல்.
6. மீன் உற்பத்தியை 2022-23 நிதியாண்டுக்குள் 200 லட்சம் டன்னாக அதிகரித்தல்.
7. 2024-25 நிதியாண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தல்.
8. கால்நடைகளில் கோமாரி உள்ளிட்ட நோய்களை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான திட்டம்.

சுகாதாரத் துறை


 1.'ஆயுஷ்மான்' திட்டத்தின் கீழ் அரசு-தனியார் ஒத்துழைப்பில் மருத்துவமனைகள் தொடங்குதல்.
2. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான
திட்டம்.
3. தொற்றா நோய்களை எதிர்கொள்ள 'ஃபிட் இந்தியா' திட்டம்.
4. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2024-ஆம் ஆண்டுக்குள் மலிவு விலை மக்கள் மருந்தகங்களை அமைத்தல்.
5. நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.

கல்வித்துறை


1. புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
2. உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்.
3. திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு,
4. தேசிய காவல் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.
5. வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கான
திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள்,
6. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி,

தொழில்துறை


1. செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புijதிய திட்டம்.
2. ரூ.1,480 கோடி செலவில் தேசிய ஜவுளி தொழில்நுட்பத் திட்டம்.
3. ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டை அதிகரிக்க 'நிர் விக்' திட்டம்.
4. ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரிகளை இணையவழியில் திரும்பப் பெறுவதற்கான வசதி,
5. 2020, ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு எளிய வழிமுறை அமல்.


கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத்துறை


1. 'உடான்' திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும்.
2. 2023-ஆம் ஆண்டுக்குள் தில்லி-மும்பை விரைவுவழிச் சாலை.
3. சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.
4. முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.
5. போக்குவரத்துத் துறை கட்டமைப்புகளை மேம்படுத்த
ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.
6. அரசு-தனியார் ஒத்துழைப்பில் 150 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.
7. தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை விரைவில்
அறிமுகம்.
8. தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம்
கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படும்.
9. வீடுகளில் 3 ஆண்டுக்குள் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள்
பொருத்த நடவடிக்கை.

நிதித்துறை

1. வருமான வரி விகிதங்கள் குறைப்பு.
2. 2020-21 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீதமாக அதிகரிப்பு.
3. நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதமாக அதிகரிப்பு,
4. ஆதார் எண் அடிப்படையில் நிரந்தரக் கணக்கு எண்
- (பான்) வழங்கப்படும்.
5. வங்கி டெபாசிட்டுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
6. ரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டும் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு.
7. குறைந்த விலை வீட்டுக் கடன்களுக்கான வட்டி வரிச்சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்


1. பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருப்பதை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக் குழு.
2. 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிதிறன்பேசிகள் வழங்குதல்,
3. கருவுற்ற தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய சிறப்புக் குழு.

கலாசாரம் மற்றும் சுற்றுலா


1. தமிழகம் (ஆதிச்சநல்லூர்) உள்பட 5 மாநிலங்களில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த அருங்காட்சியகங்கள்.
2. இந்தியப் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம்
உருவாக்கப்படும்.
3. நாணயம் சேகரித்தல், வர்த்தகம் தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
4. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங் காட்சியகம் அமைக்கப்படும்.
5. குஜராத்தின் லோத்தல் பகுதியில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.


முக்கிய திட்டங்கள்


1. விவாத சே விஸ்வாஸ் - மேல்முறையீட்டு அமைப்புகளின் நேரடி வரி விதிப்பு 4.83 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன இந்த வழக்குகளை விசாரிக்கும் மற்றும் இதன் எண்ணிக்கையை குறைக்கும் அமைப்பு.
2. கிருஷி ரயில் திட்டம் (தனியார் - பொதுத்துறை) - - - பதப்படுத்த வேண்டிய வகையிலான பொருட்களை சரக்கு ரயில்கள் மூலம் தடையின்றி கொண்டு செல்வதற்காக குளிரூட்டும் வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் கூடிய திட்டம்.
3. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் - அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் தற்போது நடைமுறையிலிருக்கும் மீட்டர்களை ஸ்மார்ட் வீடுகளாக மாற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சௌபாக்கிய திட்டத்தின் கீழ் 2.66 கோடி குடும்பங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டது.
4.1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எல்ஐசி ஆயுள் காப்பீட்டு துறையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக உள்ளது.
5. ஜன் ஒளஷதி (மக்கள் மருந்தகம்) - - - வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
6. ஸ்டெடி இன் இந்தியா - உயர்கல்விக்காக வெளிநாடு மாணவர்களால் தேர்வு செய்யப்பட கூடிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் இத்திட்டத்தின்கீழ் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டம் உள்ளது.
7. உடான் திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
கர்நாடக மாநிலம்  ஹொசக்கோட்டே நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 262 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. (சென்னை - பெங்களூர் இடையே உள்ள விரைவு சாலைகள்)

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2