List Of Rivers In Tamilnadu State,Seasonal Winds,Rainfall

             List Of Rivers In Tamilnadu State,Seasonal              Winds,Rainfall

தமிழ்நாடு ஆறுகள் மற்றும் பருவகால காற்று மற்றும் மழைப்பொழிவு உருவாக்கம்.

 ➡ வடிகாலமைப்பு:

தாமிரபரணி ஆற்றை தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றக்கூடிய ஆறுகள் ஆகும்.
‣ தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலங்களிலும் மழை பெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது.

காவிரி

காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில்
கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி  மலையில் பிரம்மகிரி  குன்றுகளில் தலைக்காவிரி  என்னும் இடத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில்
சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
‣ இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு  இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு  எல்லையாக உள்ளது.
‣ தர்மபுரி மாவட்டத்தில்  ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை
உருவாக்குகிறது. 
‣ ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று
அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்  இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
‣ மேட்டூர்  நீர்த் தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர்  தொலைவில் பவானி ஆறு   இதன் துணையாறாக
வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.
‣ பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின்  சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது. 
‣ கரூரில் இருந்து  10 கி.மீ  தொலைவிலுள்ள திருமுக்கூடல்  என்னும்  இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை  ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள்
இணைகின்றன. 
‣ இப்பகுதியில் ஆற்றின் அகலம்
அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என  அழைக்கப்படுகிறது.
‣ திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு  இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
 ‣ வடகிளை  கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
‣ இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி  தொடங்குகிறது.
‣ சுமார்  16 கிலோமீட்டர் தொலைவிற்கு
பாய்ந்தபின் மீண்டும்  இவ்விருகிளைகள் இணைந்து   
' ஸ்ரீரங்கம் தீவை'  உருவாக்குகின்றன.
‣ 'கிராண்ட்  அணைகட்  என்றழைக்கப்படும் கல்லணை  காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
‣ இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல  கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும்  ஒரு  வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி
உள்ளது.
‣ காவிரி டெல்டா பகுதிகளில் கிளை
ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல்
அமைப்பு 'தென்னிந்தியாவின் தோட்டம்' என்று  அழைக்கப்படுகிறது. 
‣ பின்னர் கடலூருக்கு தெற்கே
வங்க கடலில் கலக்கிறது.


பாலாறு

பாலாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில்  தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
‣ இது சுமார் 17,871 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்  பாய்கிறது. 
‣ இதில் 57% தமிழகத்திலும் மீதிமுள்ள
பகுதிகள் கர்நாடகா மற்றும்
 ஆந்திரப் பிரதேசத்திலும்  உள்ளன.
‣ பொன்னி, கவுண்டினியா நதி, மலட்டாறு, செய்யாறு மற்றும் கிளியாறு ஆகியன பாலாற்றின்  துணை ஆறுகளாகும்.
‣ இவ்வாற்றின் மொத்த  நீளம் 348 கிலோமீட்டர் ஆகும். 
‣ இதில் 222 கி.மீ.  தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது.
‣ இது வேலூர்  மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாகப்  பாய்ந்து,
கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில்  கலக்கிறது.

தென்பெண்ணையாறு/தென்பொருணையாறு

இது கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா  மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது.
‣ இதன் வடிநிலப்பரப்பு சுமார்
 16019 சதுர கிலோ மீட்டர் ஆகும். 
 ‣ இதில் 77% தமிழ்நாட்டில் உள்ளது.
‣ கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர்  மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக
தென்கிழக்கு திசையில் சுமார் 247 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த நதி பாய்கிறது.
‣ கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாக திருக்கோவிலூர் அணைகட்டிற்கு அருகில் பிரிகிறது.
‣கெடிலம் ஆறு கடலூருக்கு அருகிலும்
பெண்ணையாறு புதுச்சேரி  யூனியன் பிரதேசத்திற்கு  அருகிலும் வங்கக்  கடலில் கலக்கின்றன.
‣ சின்னாறு,மார்க்கண்ட நதி,  வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு
ஆகியன முக்கிய துணை ஆறுகளாகும். ‣ இந்த ஆறு  உற்பத்தியாகும் இடங்களில் கனமழை காரணமாக  திடீர், குறுகிய  கால வெள்ளப்  பெருக்கினை ஏற்படுத்துகிறது. 
‣ இது தமிழ்நாட்டின் முக்கிய  நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது. 
‣ ஆற்றின் குறுக்கே  கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. 
‣ பெண்ணையாறு இந்து  சமய மக்களால் புனித நதியாகக்  கருதப்படுகிறது.
‣ மேலும் தமிழ் மாதமான  தை  மாதத்தில் இந்த ஆற்றுப்  பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி) பல்வேறு விழாக்கள்
கொண்டாடப்படுகின்றன.

வைகை:

வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி  மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச்  சரிவில் உற்பத்தியாகிறது. 
‣ இதன் வடிநிலம் சுமார்  7,741 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது.
‣ இப்பரப்பளவு முழுவதும் தமிழகத்தில்
அமைந்துள்ளது. 
‣ இது மதுரை, சிவகங்கை  மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின்
வழியாகப் பாய்கிறது. 
‣ இதன் மொத்த நீளம் சுமார்  258 கிலோ மீட்டராகும்.
‣ இவ்வாற்றின் நீரானது  இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய  ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து  வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது.

தாமிரபரணி:

தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் (காப்பர்)  மற்றும் வருணி  (சிற்றோடைகள்) என்பதிலிருந்து
பெறப்பட்டது. 
‣ இவ்வாறுகளில் கரைந்திருக்கும்
செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது  செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
‣ தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம்
பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின்  பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
‣ இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு  தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
‣ திருநெல்வேலி  மற்றும் தாத்துக்குடி மாவட்டங்களின் வழியே  பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
‣ காரையாறு, சேர்வலாறு,  மணிமுத்தாறு, கடனா நதி,பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன
இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.




காலநிலை:

கடகரேகை - இந்தியாவை இரு  சமபாகங்களாகப் பிரிப்பதையும்,  தமிழ்நாடு  கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது என்பதையும்
ஏற்கனவே கற்றுள்ளீர்கள். 
‣ சூரியனின் செங்குத்து
கதிர்களினால் வெப்பநிலையானது ஆண்டு  முழுவதும் அதிக அளவில் காணப்படுகிறது.
‣ தமிழகம் வெப்பமண்டல காலநிலை மண்டலத்தில்  அமைந்திருந்தாலும் கிழக்கு கடற்கரைப்பகுதி  வெப்பமண்டல கடல் காலநிலையைப் பெறுகிறது.
‣ இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல்  இரண்டும் கடற்கரையோர காலநிலையில்  தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. 
‣ தமிழ்நாட்டின்  வெப்பநிலை 18°C முதல் 43°C  வரையிலும் அதன்
சராசரி மழை அளவு 958.5மி.மீட்டராகவும் உள்ளது.


குளிர்காலம்:

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கு மகர ரேகைக்கும் இடையில் விழுகிறது.
‣இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா  முழுவதும்  சாய்வான சூரியக்  கதிர்களைப் பெறுகிறன்றன.
‣ ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று  குளிராகக் காணப்படுகிறது. 
‣ கோடைக்காலம் மற்றும்  குளிர்காலத்திற்கு இடையேயான வெப்பநிலை  வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை.
‣ தமிழகத்தில் குளிர்கால  வெப்பநிலையானது, 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
‣இருந்தபோதிலும்  மலைவாழிடங்களில்
குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில்  5 °C க்கும் குறைவாக உள்ளது.
‣ நீலகிரியில்  சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் O°C ஆகவும்  பதிவாகிறது. 
‣ இக்குறைந்த வெப்பநிலை  அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக்
காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் வறண்ட  வானிலையே நிலவுகிறது.

கோடைக்காலம்:

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்
நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது  தென்னிந்தியாவில்  விழுகிறது. 
‣ ஆகையால்  பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது
படிப்படியாக அதிகரிக்கிறது.
‣ தமிழகம்,  கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால்
அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. ‣ பொதுவாக  வெப்பநிலையானது 30°C லிருந்து 40°c  வரை  வேறுபடுகிறது.
 ‣ இப்பருவத்தில் குறிப்பாக
மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்  பருவமழை மூலமும்,  வெப்பச்சலனம் மூலமும்  மழையைப் பெறுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று:

மார்ச் முதல் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தை பெறுகிறது.
‣ இதனால் வட இந்தியப் பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிறது. 
‣ இச்சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள   இந்திய பெருங்கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது.
‣ இது தென்மேற்கு பருவகாற்று உருவாக காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் மழைமறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவை பெறுகிறது.
‣ இப்பருவத்தில் மழைப்பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது.
‣ கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 செ.மீ மழை பெறுகிறது.
‣ எனினும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ  வரை மழையைப் பெறுகின்றன. ‣ மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழை அளவை  பெறுகின்றன.

வடகிழக்கு பருவக்காற்று:

வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல்  டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது.
‣ மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம், வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் சூரியன்  கடகரேகையிலிருந்து  மகர ரேகைக்குச் செல்வதால் வெப்பநிலை  மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்துகிறது.
‣ இதனால் வட இந்தியாவிலிருந்து
வங்கக் கடலை நோக்கி காற்று வீசுகிறது.
‣ வங்கக் கடலை வந்தடையும் போது இக்காற்று  கொரியாலிஸ் விசை காரணமாக (பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை) திசை விலக்கப்பட்டு
வடகிழக்கு திசையிலிருந்து வீசுகிறது. 
‣ ஆகையால்  இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என்று  அழைக்கப்படுகிறது. 
‣ வடகிழக்கு பருவக் காற்றானது
திரும்பி வரும் தென் மேற்கு பருவக் காற்றின்  ஒரு பகுதியாதலால்  இக்காற்றைப் ' பின்னடையும்
பருவக்காற்று' என்றும் அழைப்பர். 
‣ இப்பருவம்  தமிழ்நாட்டின் மழைக்காலமாகும்.
‣ தமிழ்நாட்டின்  வருடாந்திர மழையளவில் 48% இப்பருவத்தில்
கிடைக்கிறது. 
‣ இப்பருவத்தில் கடற்கரை
மாவட்டங்கள் 60 சதவீதமும் உள்மாவட்டங்கள்  40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர  மழையையும் பெறுகின்றன.
‣ பொதுவாக இப்பருவத்தில் வெப்ப மண்டல  சூறாவளிகள் உருவாகின்றன. ‣ வங்கக் கடலில்  உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிகக் கனத்த மழையை தோற்றுவிக்கின்றன.
‣ தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை வெப்ப மண்டலச் சூறாவளி மூலம் கிடைக்கிறது.
‣ இப்பருவத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகள் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரை மழையைப் பெறுகின்றன.
‣ மத்திய மற்றும் வட மேற்கு தமிழகம் 50 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழையைப் பெறுகின்றன.
‣ இந்த சூறாவளி காற்றுகள் சில நேரங்களில் பயிர்கள் , உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.
    

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2