கரோனா வைரஸ் பற்றிய சில குறிப்புகள்

கரோனா வைரஸ்:

‣  கரோனா  என்பது வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
‣ இதற்கு முன்பு கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டவை - சார்ஸ், மெர்ஸ்.
‣ இந்த கரோனா வைரஸ் கொவைட் - 19 என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

corona_virus


பெயர் காரணம்:

• பொதுவாக வைரஸ்கள் “ RNA” மரபணுக்களை கொண்டவை.
• “ கரோனா வைரஸ்” உள்ள
 “ RNA”ஆனது எண்ணெய் படிப்பதினால் ஆன புரதம் மற்றும் கொழுப்பு உறையினுள் அமைந்துள்ளது.
• புரதங்கள் ஆனது கூர்முனை போன்ற வடிவில் வைரஸின் புறபரப்பில் நீட்டிக் கொண்டிருந்தன.
• ஒட்டுமொத்தமாக அந்த வைரஸை பார்க்கையில் “ கிரீடம்”  போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
• லத்தீன் மொழியில் “ கிரீடம்” என்பதை குறிப்பதற்கு “ கரோனா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
• அதன் காரணமாக “ கரோனா” என்ற பெயரை அந்த வைரசுக்கு சூட்டப்பட்டது.

வைரஸ் உடலில் பரவும் முறை மற்றும் பெருக்கம்:

‣ கரோனா வைரஸ் உடலில் தாக்கப்பட்ட செல்லின் மூலம் பல்கி பெருக ஆரம்பிக்கிறது.
‣ பாதிக்கப்பட்ட செல்லில் இருந்து புதிதாக தோன்றும் செல்கள் அனைத்தும் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவையாகவே இருக்கும்.
‣ உயிருடன் இருக்கும் ஒவ்வொரு செல்லும் இறப்பதற்கு முன் லட்சக்கணக்கான செல்களை உற்பத்தி செய்கின்றன.
‣  ” கரோனா” வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த செல்கள் அருகில் உள்ள செல்களையும் தாக்கத்  தொடங்குகின்றன.
‣ இவ்வாறாக வைரஸானது அனைத்து செல்களுக்கும் பரவுகிறது.
‣ முக்கியமாக நுரையீரலில் உள்ள பெரும்பாலான செல்களுக்கு வைரஸ் பரவுகிறது.

உடலில் உள்ள செல்லை எவ்வாறு தாக்குகிறது?

‣  செல்லில் உட்கரு அமிலங்களான அடினைன், குவானைன், சைட்டோசைன், தைமின் உள்ளிட்டவை
காணப்படுகின்றன.
‣ அவை ஒன்றோடொன்று இணைந்து
அடிப்படை இணையை (பேஸ் பேர்) உருவாக்குகின்றன.
‣ மனித செல்லில் 300 கோடிக்கும் அதிகமான அடிப்படை  இணைகள் காணப்படுகின்றன.
‣'கரோனா' வைரஸின் ஆர்என்ஏ மரபணுவில் சுமார்  30,000 அடிப்படை இணைகள் உள்ளன.
‣ வைரஸால்  பாதிக்கப்பட்ட  செல்லானது ஆர்என்ஏ மரபணுவில்
உள்ள தகவல்களை எடுத்துக் கொள்கிறது.
‣ அதன் அடிப்படையில், மனித நோய் எதிர்ப்பு சக்தியை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான புரதங்களை வைரஸால் பாதிக்கப்பட்ட செல்லானது தயாரிக்க ஆரம்பிக்கிறது.

வைரஸை உடல்  எவ்வாறு எதிர்கொள்கிறது?

‣ மனித உடலுக்குத் தொடர்பில்லாத எந்தவொரு பொருள்  உடலுக்குள் நுழையும்போதும் அதை  அழிப்பதற்கான  பணிகளை உடலின்  நோய் எதிர்ப்பு மண்டலம் மேற்கொள்ளத் தொடங்குகிறது.
‣ உடலினுள் புதிய  வைரஸ்கள், பாக்டீரியாக்கள் நுழையும்
போதும் அதை அழிப்பதற்கான பணிகளை நோய் எதிர்ப்பு
செல்கள் மேற்கொள்கின்றன.
‣ அவ்வாறாக உடலில் பல்கிப் பெருகிய 'கரோனா' வைரஸ்  தாக்கப்பட்ட செல்களை அழிப்பதற்கான பணிகளை நோய்  எதிர்ப்பு செல்கள் மேற்கொள்ளத் தொடங்குகின்றன.
‣ இதன்  காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது.
‣ நுரையீரலில் 'கரோனா' வைரஸால் தாக்கப்பட்ட  செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவற்றையும்
நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்கத் தொடங்குகிறது.
‣ இதன் காரணமாக நுரையீரலில் உயிரிழந்த செல்களின்  எண்ணிக்கை அதிகரித்து, நுரையீரல் செயலிழக்கத் தொடங்குகிறது.
‣ இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
‣ இது  மேலும் தொடர்கையில் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழக்கிறார்.

பாதுகாத்துக்கொள்ள மருந்துகள் உள்ளனவா?

‣ தற்போதைய சூழலில் “கரோனா” வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் தயாரிக்கப்படவில்லை.
‣ ' ஆன்ட்டிபயாட்டிக்' எனப்படும் நோயெதிர்ப்பு உடலில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க வல்லவை.
‣ ஆனால் வைரசுக்கு எதிராக அவை செயல்படாது.
‣ கரோனா வைரஸ் தாக்கி அழிக்கவல்ல மருந்துகளையும் அந்த வைரஸை எதிர்கொள்வதற்கான வலிமையை மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை அளிக்கவல்ல மருந்துகளை தயாரிக்கும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
‣  வைரசுக்கு எதிராக மருந்துகளை உருவாக்குவதற்கான முதல் பணி அந்த வைரஸை தனிமைப்படுத்துவது.
‣ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸ் வெற்றிகரமாக தனிமைப்படுத்தி உள்ளனர்.
‣ ஏற்கனவே ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே கரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்துள்ளன.
‣ மருந்துகள் தயாரிப்பதற்குப் வசதியாக ஆய்வக சூழலில்  ' கரோனா' வைரஸை உருவாக்கும் நடைமுறையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றியடைந்துள்ளது.
‣ ' கரோனா'  வைரசை  எதிர்கொள்வதற்கான மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவை எலி முதலான விலங்குகளில் பரிசோதிக்கப்படும்.
‣ பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் மனிதர்களின் மீதான பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
‣ இன்னும் 2 ஆண்டுகளில் ' கரோனா' வைரசுக்கு தடுப்பு மருந்து
 தயாரிக்கப் பட்டு விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.

உடலில் நுழைவது  எப்படி?

‣ மூக்கு, கண்கள், வாய் ஆகியவற்றின் வாயிலாக கரோனா வைரஸ் உடலில் நுழைகிறது.
‣ ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் (ஏசிஇ-2) என்ற புரதங்களை தயாரிக்க வல்ல செல்கள் மூச்சுக்குழலில் காணப்படுகின்றன.
‣ அந்த செல்களில் “ கரோனா வைரஸ்” ஒட்டிக்  கொள்கிறது.
‣ வெளவால்களிலும் இதே செல்லை தான் “ கரோனா வைரஸ்” தாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
‣ எனவே கரோனா வைரஸ் ஆனது  வெளவால்களில் இருந்து தோன்றி மற்ற உயிரினங்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
 
                                                                                                                            by gmsvision 

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2