தமிழ்நாட்டின் மண் வகைகள்

➡ தமிழ்நாட்டின் மண் வகைகள்:

‣ மண் உலகின் இன்றியமையாத மற்றும் புதுப்பிக்க இயலாத வளமாகும்.
‣ இரண்டு அங்குல வளமான மண் உருவாக 300 முதல் 1000 ஆண்டுகள் ஆகின்றன.

➡ வண்டல் மண்:

‣ தமிழ்நாட்டின் ஆற்று பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
‣ தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.
‣ சில உள்  மாவட்டங்களில் ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது.
‣ வண்டல் மண் ஒரு வளமான மண், காரணம் அதில் உள்ள தாதுக்கள்.
‣ அதில் உள்ள தாதுக்கள் - சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன், பாஸ்பாரிக் அமிலம்.
‣ இந்த மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலை மக்குகள் குறைவாக உள்ளன.
‣ இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண்ணாகும்.
‣ நெல் , கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இந்த மண்ணில் பயிரிடப்படுகின்றன.


➡ கரிசல் மண்:

‣ தீப்பாறைகள் சிதைவு மூலம் கரிசல்மண் உருவாகிறது.
‣ இது ரீகர் மண் என்றும் அழைக்கப்படுகிறது.
‣ இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது.
‣ தக்கான பீடபூமி பகுதிகளில் அரை வறண்ட நிலையில் இம்மண் உருவாகிறது.
‣ இம்மண் மிக நுண்ணிய துகள்களை கொண்ட களி மண்ணால் ஆனது.
‣ இந்த மண்ணில் உள்ள வளங்கள்:
• பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரஜன் மற்றும் உயிரின பொருட்களின் சத்து குறைவாக உள்ளது
• கால்சியம், மெக்னீசியம், கார்பனேட், பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
‣ இந்த மண்ணில் பயிரிடபடுபவை:
• பருத்தி, கம்பு, சோளம் மற்றும் கால்நடை தீவனங்கள் போன்ற முக்கிய பயிர்கள்.
‣ இந்த மண் உள்ள இடங்கள்:
• கோயம்புத்தூர், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி.

➡ செம்மண்:

‣ தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.
‣ இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
‣ இம்மண் மணல் மற்றும் களிமண் கலந்த தன்மை  உடையது.
‣ இருப்பினும் இம் மண்ணின் தன்மைகள்  அவை உருவாகும் விதம், மண் உருவான காலநிலை  ஆகியவற்றைப் பொருத்து  மாறுபடுகிறது.
‣ செம்மண் நுண் துகள்களை  உடையதால்  ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை
பெறவில்லை.
‣ இரும்பு ஆக்சைடுகள் அதிகளவில்
காணப்படுவதால் செம்மண் சிவப்பு நிறத்துடன்  காணப்படுகிறது.
‣ நைட்ரஜன், பாஸ்பரஸ், அமிலம் மற்றும் இலைமக்கு  சத்துகள் இம்மண்ணில் குறைவாகக் காணப்படுகின்றன.
‣ நெல், கேழ்வரகு, புகையிலை
மற்றும் காய்கறிகள் ஆகியன  இம்மண்ணில்  பயிரிடப்படும் முக்கிய பயிர் வகைகளும், உரங்கள்  மற்றும் நீர்ப்பாசன வசதிகளுடன் இம்மண்ணில்
அனைத்து வகை பயிர்களையும் பயிரிடலாம்.
‣ இம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

 ➡ சரளை மண்:

‣ சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது.
‣ இவை ஒரு வளமற்ற மண்ணாகும்.
‣ காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில
பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும்  இம்மண்  காணப்படுகிறது.
‣ நெல், இஞ்சி, மிளகு மற்றும் வாழை ஆகியன  இம்மண்ணில் விளைகின்றன.
‣ தேயிலை மற்றும்  காபி  பயிரிடுவதற்கும் இம்மண் ஏற்றதாக உள்ளது.

➡ உவர் மண்:

‣ தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில்  மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
‣ வேதாரண்யம்  பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண்
காணப்படுகிறது.
‣ டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட சுனாமி அலைகள்  அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப்
பகுதிகளில் படிய வைத்துள்ளன.
‣ இதனால்  கடற்கரையில் சிலபகுதிகள் பயிரிட உகந்ததாக  இல்லை .

 ➡ மண் அரிப்பு:

‣ மண் ஒரு புதுப்பிக்க இயலாத வளமாகும்.
‣ மண் அரிப்பு ஒரு முறை ஏற்படின் அவற்றை புதுப்பிப்பது  எளிதான செயல் அல்ல.
‣ காடுகள் அழிப்பு , அதிக மேய்ப்பு, நகரமயமாக்கம் , அதிக மழைப்பொழிவு ஆகியன மண் அரிப்பின் முக்கிய காரணங்களாகும்.
‣ மண்வளத்தை குறைத்து,  விளைச்சலை குறைக்கிறது.
‣ எனவே மண்வளத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

                                                                                                                by gmsvision


Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2