CURRENT AFFAIRS FOR MAINS EXAM

         CURRENT AFFAIRS FOR MAINS EXAM 


1. பாதுகாப்பு அற்ற கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை  செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது ?
              (தமிழ்நாடு)
        [2018-2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில் 45.3% உணவுகளின் தரம் குறைவாகவும் 12.7% வகைகள் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது)

2. 2100 க்குள் உலகளாவிய வெப்பநிலை எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும் என்று தெரிவித்துள்ளனர் ?
                            (3.2)
                UNEP Emissions Gap Report 2019

3. பாலில் எந்த நச்சு அதிகமாக உள்ளது  என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது?
     (அஃப்லாடாக்சின் M1(Aflatoxin M1))

[தமிழ்நாடு, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில்
வினியோகிக்கப்படும் பாலில் கூடுதலாக உள்ளது.)

4. லோக்பால் சின்னத்தை நவம்பர் 26ல் அறிமுகப்படுத்தியவர்?
(பினாக்கி சந்திரா கோஸ்)
இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர்
“யாருடைய செல்வத்திற்கும் பேராசைப்பட வேண்டாம்.”


5. உலகளாவிய பாலின விகிதப் பட்டியியல் – 2020

உலகளாவிய பாலின விகிதப் பட்டியியல் பாலின சமத்துவத்தை அளவிட உதவும் ஒரு குறியீடாகும்.
உலகளாவிய பாலின விகிதப் பட்டியியல் முதல் முதலில்
ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
உலகளாவிய பாலின விகிதப் பட்டியியலில் இடம் பெற்ற நாடுகளின் பட்டியல்.
ஐஸ்லாந்து – முதலிடம்.
இந்தியா – 112 ஆம் இடம் (கடந்த ஆண்டு 108 ஆம் இடம்).
வங்க தேசம் – 50 ஆம் இடம்.
இலங்கை - 123 ஆம் இடம்.
பாகிஸ்தான் – 153 ஆம் இடம்.

6. அடால் பூஜால் யோஜனா
குறைந்த நிலத்தடி நீர் உள்ள பிராந்தியங்களில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம்.
இத்திட்டம் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின்
கீழ் உலக வங்கியின் நிதி உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்த்திற்கு 6000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா அரசாங்கத்திற்கு உலக வங்கியிற்கும் இடையேயான நிதி முறை 50:50 ஆகும் .

7. வானிலை எச்சரிக்கை அமைப்பு
இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தால் (IMD – புது தில்லி 1875) வானிலை எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது. மக்களுக்கு பேரிடர்களினால் வரும் ஆபத்தை முன்னெச்சரிப்பதே இதன் நோக்கம்.
எச்சரிக்கை நிறங்கள்------------------மக்களுக்கு தெரிவிப்பது
சிவப்பு-------------- மிகவும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது
கருஞ்சிவப்பு (ஆம்பர்) ------------உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது
மஞ்சள்---------போக்குவரத்து பாதிப்பிற்கு வாய்ப்புள்ளது
பச்சை-------------அச்சப்படத் தேவையில்லை
       
                                                   
• இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் - - - - கனுங்கா
• மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - - - - சஞ்சய் தோத்ரே
• மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் - - - - -  ரவிசங்கர் பிரசாத்
• இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் - - -  சக்தி காந்த தாஸ்
• மத்திய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் - கிரிராஜ் சிங்
• கர்நாடக மாநிலத்தின் முதல்வர் - - - - எடியூரப்பா
• கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் - - - -
வஜூபாய் வாலா
• இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - - - எஸ் ஜெய்சங்கர்.
• மத்திய நீர்வளம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் - - - - - - - - - - - - - - - - - - - - - - ரத்தன்லால்  கட்டாரியா
• தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி துரை . ஜெயச்சந்திரன் பொறுப்பேற்பு.
• பீகார் முதல்வர் - - - - - நிதிஷ்குமார்
• பஞ்சாப் முதல்வர் - - - - அமரீந்தர் சிங்
• டில்லி முதல்வர் - - - - கெஜ்ரிவால்
• தில்லி துணை முதல்வர் - - - - - - - - - - - - - - - - - - - - மணீஷ் சிசோடியா
• தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - உடுமலை கே. ராதாகிருஷ்ணன்


• பேரிடர் மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தமிழக நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழக இயக்குனர் மத்திய கோபால் தெரிவித்துள்ளார்.




• அரசியல் சாசனத்தின் பத்தாவது பிரிவான கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை அங்கீகரித்து.1992-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
• குறிப்பிட்ட நிகழ்வுகளில் அவைத் தலைவரின் உத்தரவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று அந்தத்  தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
• அதே நேரத்தில், அவைத் தலைவர்  முடிவெடுத்து உத்தரவைப் பிறப்பித்த பிறகுதான் அந்த உத்தரவு செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியுமே தவிர, அதுவரை நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும்
அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

• அரசியல் சாசன சட்ட பிரிவுகள் 212, 122 ஆகியவற்றின் கீழ் கட்சி தாவல் தடுப்பு சட்டமாக இருந்தாலுமே அவை  நடவடிக்கைகளில் தலையிட  நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை.
• தற்போது நீதிபதி நாரிமன் தலைமையிலான குழு கட்சி தாவல் தடைச் சட்டத்தினை சுதந்திரமாக நிறைவேற்ற தனி குழு அறிக்கையை அமைக்க வேண்டும் என  பரிந்துரைக்கிறது.
   
articles---- 103, 192, 329



‣ இந்திய மருந்து துறை நிறுவனங்கள் 85% மூலப் பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.
‣ இந்தியாவுக்கான சீன இறக்குமதியில் தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பொருள்கள், இயற்கை உரங்கள், கணினி வன்பொருள்கள், ஆலைகளுக்கான இயந்திரங்கள் ஆகிய 5 பொருள்களின் பங்களிப்பு 46 சதவீதம் அளவிற்கு உள்ளது.
‣ இதனால் இந்திய பொருளாதாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.


‣ மனித கழிவுகளிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கும் திட்டத்தை நீலகிரி மாவட்டம் நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்த உள்ளது. (கேத்தி பேரூராட்சி - நீலகிரி மாவட்டம்)
‣ இதன் மூலம் விவசாயத்தை பெருக்குவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
‣ இத்திட்டத்திற்கு நிதி ஆயோக் பாராட்டு தெரிவித்துள்ளது.
‣ அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யு.எஸ்.எய்டு நிறுவனம் தான் உலகில் பல்வேறு நாடுகளில் மனிதக் கழிவுகளில் இருந்து விவசாயத்திற்கு உரம் தயாரித்து வருகிறது.
‣ ஆனாலும் உலகிலேயே கேத்தியில் தான் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது  என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
‣ இதன்  வெற்றிக்குக் காரணமான கிராமிய  அபிவிருத்தி இயக்கத்தின் இயக்குநர் என். கே. பெருமாள் மார்ச் 16-
ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பாராட்டப்பட உள்ளார்.
‣ இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தேசிய  பசுமைத் தீர்ப்பாயத்தின் கண்காணிப்பு அலுவலர் நீதிபதி  பி.ஜோதிமணி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



‣ அரசமைப்புச் சட்டத்தின் 16(4) மற்றும் 16(4-ஏ) பிரிவுகளின்படி, பணி நியமனத்திலும், பதவி உயர்விலும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.



‣ பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தின் நன்மைகள்:

•வேளாண் நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் மாற்ற முடியாத அளவுக்கு வகைப்பாடு  செய்யப்படும்.
• வேளாண்மை சாராத  வேறு எந்தத் திட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்  மண்டலத்தில் செயல்படுத்த
முடியாது.
• இந்தியாவின் முதல்  வேளாண் மண்டலம் 2011-ஆம்  ஆண்டில் உத்தரகண்டில் அமைக்கப்பட்டது .
• இது கேரளத்திலும்  செயல்படுத்தப்பட்டுள்ளது.
• வேளாண் மண்டலத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க  புதிய பயிர் சாகுபடி திட்டங்கள்
வகுக்கப்படும்.
• வேளாண் பயிர்களை பாதுகாக்கக்கூடிய வகையில், நவீன ஆராய்ச்சி கூடங்கள்  அமைக்கப்படும்.
• சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சாகுபடி தொடங்கி சந்தைப்படுத்துதல் வரை கண்காணிக்கப்படும்.
• விவசாயம் சார்ந்த தொழில்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர்.
• ஆண்டு மகசூல் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்.
• இயற்கை முறை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஆகிய அம்சங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பொதுவான அம்சங்கள் ஆகும்.


‣ ஒளி சிதறல் நோபல் பரிசு - சர். சி.வி ராமன் - 1930 - இயற்பியல்.
‣ முதன்முதலில் 1954இல் நமது நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
‣ 1987 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


‣ பூச்சிக்கொல்லிகள் மேலாண்மை மசோதா 2020.
‣ மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயத்தில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
‣ உலகின் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையில் 59% இந்தியாவில்தான் காணப்படுவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ( ஜப்பான் 52%, பிரேசில் 49% , அமெரிக்கா 36%, பிரிட்டன் 11%.)
‣ ரவுண்ட் அப் (பூச்சிக் கொல்லியின் பெயர்) - இந்தப் பூச்சிக்கொல்லி யில் காணப்படும் ' கிளைபோசேட்' மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.


‣ மேகதாட்டு அணை என்றால் என்ன?
‣ எம் சாண்ட் என்றால் என்ன?



➡ தமிழக பட்ஜெட்:

‣ஒரு ரூபாயில்  வரவு - செலவு

‣ வரவினங்கள்:

• மாநில வரிகள் - - - - - - - - - - - 0.61
• மத்திய வரிகளில்  மாநில அரசின் பங்கு - - - - - - - - - - - - - - - - - - - - - - 0.15
• மாநில அரசின் வருவாய் - - - - 0.07
• மத்திய அரசிடமிருந்து  பெறும் உதவி மானியங்கள் - - - - - - - - - - - - - - - 0.17

  மொத்தம் - 1ரூபாய்

‣செலவினங்கள்:


• சம்பளங்கள் - - - - - - - - - - - - - - -0.23
• ஓய்வூதியங்கள் - - - - - - - - - - - - - 0.11
• பராமரிப்பு செலவினங்கள் - - - - - 0.5
• உதவித் தொகைகளும்  மானியங்களும் - - - - - - - - - - - - - - - - 0.34
• வட்டித் தொகை - - - - - - - - - - - - - - - 0.13
• மூலதனச் செலவுகள் - - - - - - - - - - 0.13
• கடன்களும், முன்பணங்களும் - - - - 0.1

 மொத்தம் - 1 ரூபாய்

‣ வரவு-செலவு மதிப்பீடு  (ரூபாய் கோடியில்)

• வரவுகள்........... ரூ. 2,19,375.14
• செலவுகள்...... ரூ.2,40,992.78
• பற்றாக்குறை......... ரூ.21,617.64
கடன்கள்..........ரூ.4,56,660.99
• சொந்த வரி
 வருவாய்.........ரூ.1,33,530.30


‣முக்கிய அம்சங்கள்:

• வரும் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க் கடன்கள்  வழங்க இலக்கு.
• மின்னணு குடும்ப அட்டை  வைத்திருப்போர்   எங்கும்  பொருள் வாங்கலாம்.
• நெல்லை மாவட்டம் கங்கை  கொண்டானில் மெகா உணவுப்  பூங்கா அமைக்க ஒப்புதல்.
• 5 புதிய மாவட்டங்களுக்கு  ரூ.550 கோடியில் புதிய  கட்டடங்கள்.
• சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்
திட்டங்களுக்கு ரூ.4,315.21  கோடி நிதி.
• ஆட்சேபணை புறம்போக்கு  நிலங்களில் வசிப்போருக்கு  மாற்று வீட்டு மனை.
• அம்மா விபத்து-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.250  கோடி நிதி.
•பேரிடர் மேலாண்மைக்காக  ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
• காவல் துறையில் 10,276 பேர்  புதிதாக நியமனம்.
• புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
• சென்னை, மதுரை, கோவையில் சாலை பாதுகாப்புப் பிரிவுகள்.
•விபத்துகளில் சிக்கி இறப்போர்
குடும்பத்துக்கான நிதி ரூ.4 லட்சமாக உயர்வு.
• வேளாண் தொழில்நுட்ப  ஆலோசனை பெற, உழவர் -அலுவலர் தொடர்புத்  திட்டம்  உருவாக்கப்படும்.
• தோட்டக்கலை பயிர் சாகுப்டிப் பரப்பை அதிகரிக்க 325  மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அளிக்கப்படும்.
•விழுப்புரம், செங்கல்பட்டு,நாகையில் மீன்பிடித் துறைமுகங்கள்.
• தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962
கோடியில் செயல்படுத்தப்படும்.
• அம்மா உணவகத்துக்காக  சிறப்பு நோக்கு முகமை உருவாக்கப்படும்.
• ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ5,500 கோடி  நிதி.
• மகளிர் நலத் திட்டங்களுக்கு
 ரூ 78, 796.12 கோடி நிதி ஒதுக்கீடு.
• அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும்.
• 1.12 லட்சம் தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள்  மேற்கொள்ளப்படும்.



➡ நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களில் பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளன.
‣ நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு அல்லது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார் என தேசிய குற்ற ஆவண காப்பகம் சுட்டிக்காட்டுகிறது.
 ‣ நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தமிழகத்தில் 1.5% நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

‣ 2011 ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற மொத்த குற்ற சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2.7 சதவீதம் அளவில் இருந்தது.
‣ ஆனால் இப்போது மொத்த குற்ற சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.

‣ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 15வது இடத்தில் இருந்தது.
‣ தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
 
 ‣ இந்திய அரசியலமைப்பு சட்டம் 72 ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 

➡ மாநில திட்டக்குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர்  பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

                                        static gk in tamil



Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2