HOW TO CHANGE CONSTITUTIONAL AMENDMENT

அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யும் முறை

(HOW TO CHANGE CONSTITUTIONAL AMENDMENT)



  Easy to remember in mindmap  concept
      


Constitutional_Amendment


அரசியலமைப்புத் திருத்தம்:

(பகுதி-XX ) (சரத்து - 368)

• கால மாற்றத்திற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர ஏதுவாக இச்சட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

• அரசியலமைப்புத் திருத்த முறை தென் ஆப்பிரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டது.

• இது அரசியலமைப்பிற்கு ஒரு பாதுகாப்பு பகுதியாக அமைந்துள்ளது.

• இதன் மூலம் அரசியலமைப்பின் புதிய மற்றும் பழைய சட்டமுறைகளை  சேர்க்கவும், மாற்றவும், நீக்கவும் இயலும்.

• அரசியலமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில்
கொண்டுவரப்பட வேண்டும்.


திருத்தப்படும் முறைகள் :

இந்திய அரசியலமைப்பினை மூன்று வகைகளில்  திருத்தலாம். அவை,

1. எளிய பெரும்பான்மை
( Simple majority)

2. தனிப் பெரும்பான்மை
(Special majority)

3. தனிப் பெரும்பான்மை
மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் (Special Majority and Ratification by States)


➊. எளிய பெரும்பான்மை :

• ஒரு சாதாரண சட்டத்தை நிறைவேற்றுவது போல் பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்களால்
நிறைவேற்றப்படுவது ஆகும்.

• சரத்துக்கள் 4, 5, 6, 239 - A, 312 ஆகியவை.

➋. தனிப் பெரும்பான்மை :

• நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையில் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு
குறையாத உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட வேண்டும்.

தனிப் பெரும்பான்மை பலம் மற்றும் மாநிலங்களின் ஒப்புதலாலும் :

• நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையில் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு
குறையாத உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

• பிறகு அம்மசோதா இந்தியாவின் மொத்த மாநிலங்களில் பாதிக்கு குறையாது உள்ள மாநிலச் சட்டமன்றங்களின்  ஒப்புதலை பெற வேண்டும்.


     1. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த சரத்துக்கள் - 54, 55.

2. மத்திய மற்றும் மாநில நிர்வாக அதிகாரத்தின் நீடிப்பு - சரத்து 73, 162.

 3. உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் பற்றிய சரத்துக்கள் 124-147, 214- 231, 241.

    4. மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே சட்டமியற்றும் அதிகாரம் பகிர்வு தொடர்பான சரத்துக்கள் 245 - 255

5. ஏழாவது அட்டவணை - பட்டியல்கள்.

6. மாநிலங்களவை பிரதிநிதித்துவம் - நான்காவது அட்டவணை.

     7. அரசியலமைப்பினைத் திருத்தும் முறை ( சரத்து - 368).


அடிப்படைக் கட்டமைப்பு:


• நாடாளுமன்றம் அரசியலமைப்பில் உள்ள எல்லாவற்றையும் திருத்தம் செய்யலாம். ஆனால் அடிப்படை
கட்டமைப்பினை ( Basic structure) திருத்த முடியாது.

• இச்சரத்தின்படி திருத்தப்படும் ஒரு சட்டம் சரத்து 13 ன்படி ஒரு சட்டமாக கருத முடியாது.


அடிப்படைக் கட்டமைப்புகள்:

1. அரசியலமைப்பின் மேலாண்மை
2. சட்டத்தின் ஆட்சி
3. நாடாளுமன்ற முறை அரசாங்கம்
4. இறையாண்மை
5. சமயச் சார்பற்ற அரசு / மதச்சார்பின்மை
6. நல அரசு
7. கூட்டாட்சி
8. அதிகாரப் பகிர்வு
9. தனி ஒருவரின் மாண்பு
10. மக்களாட்சி
11. குடியரசு நாடு
12. முகப்புரையில் கூறப்பட்டுள்ளவை
13. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
14. நீதி மறு ஆய்வு, நீதிப்புனராய்வு
15. சுதந்திரமான நீதித்துறை

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2