State Governor

                       State Governor
                            ➡ மாநில ஆளுநர்:


‣ மாநில செயலாட்சி (அ)  நிர்வாகத்துறை :

 • ஆளுநர்   மாநிலச் செயலாட்சித் துறையின் தலைமைப் பொறுப்பினை வகிப்பவர் ஆளுநர் ஆவார்.
• மைய அரசின் ஆலோசனைப்படி 5ஆண்டுகளுக்குக் குடியரசுத் தலைவரால் ஆளுநர்  நியமிக்கப்படுகிறார். 
• 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆளுநர் நியமனத்திற்குத் தகுதியானவர் ஆவார்.
• குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்.
• மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.
• மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார். 
• பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
• மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார்.
• இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.
• குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.
• குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.
• ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.
•  ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர்  நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.
• ஆளுநரை ஒரு மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
• ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.
• ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.
• ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.
• ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.
• பாராளுமன்றம் அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது.
• அப்படி ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும். 
• ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.
•  அரசியலமைப்பு மாநில  ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
• அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார். 
• மேலும் அவரது  பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.
• அது போலவே அவரது பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.
• உரிமையியல் நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.
• ஆளுநரின் அதிகாரங்கள்   சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை, நிதித்துறை போன்றவற்றின் மீது ஆளுநர் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றார்.
• சரத்து 154 இன் படி மாநிலத்தின் செயலாட்சித்துறை அதிகாரங்கள் யாவும் அரசியலமைப்புச் செயல்படி ஆளுநரிடம் உள்ளது.
• நிர்வாக அதிகாரம்   மாநில அரசின் அனைத்து நிர்வாக முடிவுகள் மற்றும் செயல்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிப்பவர் ஆளுநர் ஆவார்.
• ஆளுநர் முதல் அமைச்சரையும் மற்றும் முதல் அமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களையும் மற்றும் அரசின் தலைமை வழக்கறிஞரையும், அரசுப் பணியாளர் தேர்வுக்குழு உறுப்பினர்களையும் நியமனம் செய்கிறார்.
• சட்ட நிர்வாகம், சட்டமன்றம் கூட்ட அழைப்பு விடுத்தல், சட்டசபை ஒத்திவைத்தல், மற்றும் சட்டசபையைக் கலைத்தல் போன்ற அதிகாரங்களை ஆளுநர் பெற்றுள்ளார்.
• எல்லாச் சட்டங்களும் இவருடைய ஒப்புதலைப் பெற வேண்டும்.  சட்டப்பேரவை, செயலில் இல்லாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க அதிகாரமுண்டு. 
• மேலவை உறுப்பினர்கள் சிலரையும் இவர் நியமனம் செய்கிறார்.
• நிதி அதிகாரம் நிதித் தொடர்புடைய சட்ட வரைவை அறிமுகப்படுத்துவதற்கு முன் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்பே சட்டப் பேரவையில் வைக்கப்பட வேண்டும்.
• நீதி அதிகாரம் தலைமை நீதிபதி மற்றும் நீதித் துறையின் உயர் அலுவலர்களை நியமனம் செய்தல், மாறுதல் செய்தல் அல்லது பதவி உயர்வளித்தல் போன்ற அதிகாரங்களை ஆளுநர் பெற்றிருக்கின்றார். 
• அவசரக் காலங்களில் ஆட்சிப் பொறுப்பைக் குடியரசுத் தலைவரே ஏற்க, ஆலோசனை சொல்ல உரிமை உண்டு.
• மாநில அரசு கலைந்து போனால் ஆளுநரே உண்மையான அதிகாரம் பெறுகின்றார்.
• மாநிலத்தினுடைய நிர்வாகத்துறை அதிகாரம் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
•  Art (153) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார் என்று கூறுகிறது. 
• சில சமயங்களில் ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம் 7வது அரசியல் சட்டதிருத்த்த்தின்படி 1956.

‣   தகுதிகள் : art (157)

 1.  இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
 2. 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

 ‣ ஒரே நபரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டால் அவருடைய ஊதியம் படிகளும் குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கிற விகித்த்தில் அந்த மாநிலங்களால் பகிர்ந்தளிக்கப்படும்.

‣ ஆளுநரின் சிறப்புரிமைகள்:

•   மாநில ஆளுநரை அவரது அதிகாரங்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றமும் விசாரிக்க முடியாது.
• தனிப்பட்ட செயல்களுக்கும் கூட ஆளுநர் மீது குற்றவியல் வழக்குத் தொடர முடியாது.
• அவர் பதவியிலிருக்கும் போது எந்த நீதிமன்றமும் அவரைக் கைது செய்ய உத்தரவிட முடியாது.
• ஆளுநருக்கென சிவில் வழக்குகள் 2 மாத முன்னறிவிப்பிற்குப் பின்னர் அவருடைய தனிப்பட்ட  செயல்களுக்காக தொடரப்படலாம்.

 ‣ ஆளுநரின் அதிகாரங்கள்:

• மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயரால்தான் நடைபெறும்.
• முதலமைச்சரையும் அவரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களையும் நியமனம் செய்கிறார்.
• மாநில தலைமை வழக்கறிஞர், மாநில தேர்தல் ஆணையர், மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
• மாநில மேலவைக்கு அறிவியல் கல்வி இலக்கியம் சமூக சேவை துறையை சார்ந்த ஆறில் ஒரு பங்கு  உறுப்பினர்களை அனுப்பலாம்.
• ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரை சட்டமன்றத்தின் கீழவைக்கு நியமிக்கிறார்.
• விதி 213 ன் படி மாநில  சட்டமன்றம் கூட்டத்தொடரில் இல்லாத போது அவசர சட்டங்களை ஆளுநர் இயற்றலாம்.
• ஆனால் சட்டமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
• ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே பண மசோதாக்கள் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தமுடியும்.
• பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை அறிய ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒருமுறை நிதி ஆணையத்தை அவர் அமைக்கிறார்.
• Art (161) ஆளுநர் மாநில சட்டம் தொடர்புடைய எவ்வித குற்றத்தின் தண்டனையிலிருந்து ஒருவரின் தண்டனையை குறைக்கவோ தள்ளி வைக்கவோ மன்னிப்பு வழங்கவோ முடியும்.
• ஆனால் மரண தண்டனைக்கு எதிராக மன்னிப்பு வழங்க முடியாது.
• இராணுவ நீதிமன்ற தண்டனையையும், கடல் சார் நீதிமன்ற தண்டனையையும் குடியரசுத் தலைவர் மன்னிக்க முடியும் ஆளுநரால் முடியாது.

                                                                                                        by gmsvision

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2