Environment and Environmental policies of India

      Environment and Environmental policies of India


சுற்றுப்புறச் சூழல் (Environment):

சுற்றுச் சூழல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று, புவியிலுள்ள நீர்நிலைகள், நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

➡ சுற்றுச்சூழல் வேதியியல்:

சுற்றுச்சூழல் வேதியியல் என்பது நீர், காற்று , மண், ஆகியவற்றில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றில் செயல்படும் வேதியியல் தன்மை ஆகியவற்றையே சுற்றுச்சூழல் வேதியியல் என்கிறோம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு:

தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றவற்றின் காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு சுற்றுச்சூழல் மாசுபாடு எனப்படும்.


மாசுபடுதலின் வகைகள்:

மக்கும் மாசுபடுத்திகள்:

• இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடைய கூடிய மாசுபடுத்திகள்.

 எடுத்துக்காட்டு - - - - தாவரம் மற்றும் விலங்கு கழிவுகள்


மக்காத மாசுபடுத்திகள்:

• இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள்.

எடுத்துக்காட்டு - - - - உலோக கழிவுகள், நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள்


 ➡ இந்தியாவில் சுற்றுச்சூழல்  கொள்கைகள்:

‣ சுற்றுச்சூழலை  பாதுகாப்பது  ஒவ்வொருவரின் மிக முக்கியமான அடிப்படை கடமையாகும்.
‣ சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் நீர், நிலம் , காற்று ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
‣ இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரித்து செல்கிறது. இதனால் புவி வெப்பமடைகிறது.
‣ இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் அரசானது சில சட்டங்களை இயற்றியுள்ளது.

Environment


‣ இந்தியா தன் சுற்றுச்சூழல்
கொள்கைகளைக் கடந்த 30 ஆண்டுகளாக  உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
‣ காற்று, நீர்  மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும்  விதமாக  உருவாக்கப்பட்டுள்ளது.
‣ இந்தியா குறைந்த வளங்களுடன்
பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு  சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
‣ நிலையற்ற காலநிலை, குறைந்த வளங்கள்  போன்றவற்றை எதிர்கொண்டு , அணுகு  முறைகளில் மாற்றம் கொண்டு, இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான  மேம்பாட்டை அடைந்துள்ளது.
‣ இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள்  மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை
அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த
உத்திரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு
51A (g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும்  காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச்  சூழலைப் பேணவும், மேம்படுத்தவும்  அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும்  கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.
‣ நாட்டின் பொருளாதார மேம்பாடே
வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது.
‣ இதன் பொருள் மக்களுக்கு அதிக வருமானம்,திறன் மிக்கக் கல்வி, சிறந்த சுகாதாரம்,ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற  நிலை மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை  அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற  சூழலை ஏற்படுத்துவதாகும்.
‣ இதற்கான  சட்டங்களை  உருவாக்குவதே இந்தியாவின்  சுற்றுச் சூழல் கொள்கைகள் ஆகும்.
                                                                                                                    static gk in tamil
                                                                                             

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2