Types Of Primary Sectors

            ➡ Types Of Primary Sectors முதல் நிலைத் தொழிலின் வகைகள்:



Primary_Sector


• மனிதன் நேரடியாக இயற்கையைச் சார்ந்து செய்யும் செயல்களே முதன்மைத் தொழில்கள் எனப்படுகின்றன.
• இவர்களை சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்.
•மனித நாகரிக வரலாற்றில் மிக முக்கிய  அங்கமாக விளங்குவது வேளாண்மை தொழில்  ஆகும்.
• மனிதன் நிலையான வாழ்க்கைக்கு முன்  வேட்டையாடுதல்,உணவு  சேகரித்தல், மேய்த்தல், மீன் பிடித்தல்,மரம் வெட்டுதல்  போன்ற தொழில்களில்  ஈடுபட்டான்.

‣முதன்மைத் தொழில்களில்  பழமையான தொழில்கள்:
• வேட்டையாடுதல்
• உணவு சேகரித்தல்

‣ உணவு சேகரித்தல்:

• மக்கள் தங்களுக்கு தேவையான உணவை இயற்கையிடமிருந்து
சேகரித்தான்.
( பழங்கள், கிழங்குகள்)
• இத்தகைய செயல்கள் மனிதன் மற்றவருடன் தொடர்பு இல்லாத
இடங்களில் வசிக்கும் மரபு வழி குடிமக்களிடம் காணப்பட்டது.

(எ.கா)

• ஆப்பிரிக்கா காடுகளில் வசிக்கும் புஷ்மென்.
• அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழம்பெரும் மக்கள் ஜார்வாஸ்.


‣வேட்டையாடுதல்:

 • வேட்டையாடும் மக்கள் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி மற்றும் தோலினை பெறுகின்றனர்.
• இவ்வகையான தொழில்கள் பரவலாக
பல இடங்களில் குறிப்பாக தொடர்பு
கொள்ள முடியாத இடங்களில் தனித்து
வாழும் மக்களிடையே காணப்படுகிறது.

(எ.கா)

ஆப்பிரிக்க பிக்மிக்கள்
• கனடாவின் எஸ்கிமோஸ்


‣ மேய்த்தல்:

• பசுமையான,புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி பருவ காலத்திற்கு ஏற்ப நாடோடிகளாக மந்தைகளோடு மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடநகர்வு செய்கின்றனர்.
• ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசியாவில் மேய்ச்சல் தொழில்
செய்பவர்கள் பருவநிலைக்கு ஏற்பவும், கிடைக்கும் மேய்ச்சல் நிலத்திற்கு ஏற்றவாறு இடநகர்வு செல்கின்றனர்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின்
தீவனங்களை விளைவிக்கப் பெரும் பண்ணைகள் உள்ளன.
• அவைகள் இயற்கை தாவரங்களை சார்ந்து இருப்பதில்லை.

Primary_Sectors




‣ மீன் பிடித்தல்:

• ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் முக்கிய
முதன்மைத் தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது.


1.உள்நாட்டு மீன்பிடித்தல்:

• சிறிய அளவில், எளிய முறையில் நடைபெறுகிறது.
• இங்கு சாதாரண மீன் வலைகளே பயன்படுத்தப்படுகிறது.

(எ.கா)

கம்போடியாவில் உள்ள டோன்லேசாப் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு
ஏரியாகும்.

• கடலில் மீன் பிடித்தல் என்பது சிக்கலான செயலாகும்.
• தொழில் கப்பல்கள் எனப்படும் பெருங்கப்பல்கள் மாதகணக்கில் மீன்
பிடிப்பதற்காக கடலிலேயே செயல்படுகின்றன.

‣ முக்கிய மீன் பிடித்தளங்கள்:

ஜப்பான்,பெரு, வடகடல் பகுதி,
வட மேற்கு அட்லாண்டிக் கடல்.


கடல்களில் நடைபெறும் பிற  தொழில்கள்:

• திமிங்கலம்,
• கடல் நாய்  வேட்டையாடுதல்,
• முத்துகுளித்தல்.


மரம் வெட்டுதல்:

• மரமானது  எரிபொருளாகவும்,இருக்கைகள் செய்யவும்,காகிதம்,
காகிதக் கூழ்  தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
• மிதவெப்ப மண்டல  காடுகளில் மென்மையான  மரங்களும்,ஒரே வகை
ஊசியிலைக் காடுகளும்  காணப்படுகின்றன.

(எ.கா)

• இரஷ்யா,கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிக மரவளம் கொண்ட
நாடுகள் ஆகும்.

‣ உலகில் தொழிற்சாலைகளில் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு மித வெப்பமண்டல காடுகளிலிருந்து பெறப்படுகின்றன.


‣ வெப்பமண்டல காடுகளில் விலைமதிப்புமிக்க தேக்கு மற்றும் கருங்காலி மரங்கள்  காணப்படுகின்றன.

‣ இங்கு மரம் வெட்டுதல் முக்கியத் தொழிலாக கருதப்படுவதில்லை.
காரணம் மரங்கள் இங்கு கூட்டமாக காணப்படுவதில்லை.








 
 

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2