Posts

Showing posts from March, 2020

HOW TO CHANGE CONSTITUTIONAL AMENDMENT

Image
அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யும் முறை (HOW TO CHANGE CONSTITUTIONAL AMENDMENT)   Easy to remember in mindmap  concept        ➡ அரசியலமைப்புத் திருத்தம்: (பகுதி-XX ) ( சரத்து - 368 ) • கால மாற்றத்திற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர ஏதுவாக இச்சட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. • அரசியலமைப்புத் திருத்த முறை தென் ஆப்பிரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டது. • இது அரசியலமைப்பிற்கு ஒரு பாதுகாப்பு பகுதியாக அமைந்துள்ளது. • இதன் மூலம் அரசியலமைப்பின் புதிய மற்றும் பழைய சட்டமுறைகளை  சேர்க்கவும், மாற்றவும், நீக்கவும் இயலும். • அரசியலமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் கொண்டுவரப்பட வேண்டும். ‣ திருத்தப்படும் முறைகள் : இந்திய அரசியலமைப்பினை மூன்று வகைகளில்  திருத்தலாம். அவை, 1. எளிய பெரும்பான்மை ( Simple majority) 2. தனிப் பெரும்பான்மை (Special majority) 3. தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் (Special Majority and Ratification by States) ➊. எளிய பெரும்பான்மை : • ஒரு சாதாரண சட்டத்தை நிறைவேற்றுவது போல் பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்

CURRENT AFFAIRS FOR MAINS EXAM

          CURRENT AFFAIRS FOR MAINS EXAM  1. பாதுகாப்பு அற்ற கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை  செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது ?               (தமிழ்நாடு)         [2018-2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில் 45.3% உணவுகளின் தரம் குறைவாகவும் 12.7% வகைகள் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது) 2. 2100 க்குள் உலகளாவிய வெப்பநிலை எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும் என்று தெரிவித்துள்ளனர் ?                             (3.2)                 UNEP Emissions Gap Report 2019 3. பாலில் எந்த நச்சு அதிகமாக உள்ளது  என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது?      (அஃப்லாடாக்சின் M1(Aflatoxin M1)) [தமிழ்நாடு, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் வினியோகிக்கப்படும் பாலில் கூடுதலாக உள்ளது.) 4. லோக்பால் சின்னத்தை நவம்பர் 26ல் அறிமுகப்படுத்தியவர்? (பினாக்கி சந்திரா கோஸ்) இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர் “யாருடைய செல்வத்திற்கும் பேராசைப்பட வேண்டாம்.” 5. உலகளாவிய பாலின விகிதப் பட்டியியல் – 2020 உலகளாவிய பாலின விகிதப் பட்டியியல் பாலின சமத்துவத்தை அளவிட உதவும் ஒரு குறியீடாகும

Indian Constitution Important Notes 3

       Indian Constitution Important Notes 3 ➡ இந்திய அரசியலமைப்பு பற்றிய சில குறிப்புகள் பகுதி 3:  81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14  82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து  83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955  84. சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15  85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்  86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு - பாராளுமன்றம்  87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17  88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16  89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18  90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19  91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21  92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவத

Indian Constitution Important Notes 2

             Indian Constitution Important Notes 2 ➡ இந்திய அரசியலமைப்பு பற்றிய குறிப்புகள் பகுதி 2:  41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( ரஷ்யா )  42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)  43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)  44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)  45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)  46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)  47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)  48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)  49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ( ஜ

Indian Constitution Important Notes 1

          Indian Constitution Important Notes 1 ➡ இந்திய அரசியல் நிர்ணய சபை மற்றும் இந்திய அரசியலமைப்பு பற்றிய சில குறிப்புகள் பகுதி 1:  1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் -  ( டிசம்பர் 6, 1946 )  2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - ( டிசம்பர் 9, 1946 )  3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - ( தில்லி)  4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - ( காபினெட் தூதுக்குழுத் திட்டம்.)  5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - ( டாக்டர் அம்பேத்கார்)  6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - ( டாக்டர் ராஜேந்திர பிரசாத்)  7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் -  ( டாக்டர் சச்சிதானந்த சின்கா)  8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - ( டாக்டர் இராஜேந்திர பிரசாத்)  9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - ( 385 + 4 )  10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்க

State Governor

                       State Governor                             ➡ மாநில ஆளுநர்: ‣ மாநில செயலாட்சி (அ)  நிர்வாகத்துறை :  • ஆளுநர்   மாநிலச் செயலாட்சித் துறையின் தலைமைப் பொறுப்பினை வகிப்பவர் ஆளுநர் ஆவார். • மைய அரசின் ஆலோசனைப்படி 5ஆண்டுகளுக்குக் குடியரசுத் தலைவரால் ஆளுநர்  நியமிக்கப்படுகிறார்.  • 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆளுநர் நியமனத்திற்குத் தகுதியானவர் ஆவார். • குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார். • மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது. • மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.  • பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம். • மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். • இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம். • குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் ப

கரோனா வைரஸ் பற்றிய சில குறிப்புகள்

Image
➡ கரோனா வைரஸ்: ‣  கரோனா  என்பது வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ‣ இதற்கு முன்பு கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டவை - சார்ஸ், மெர்ஸ். ‣ இந்த கரோனா வைரஸ் கொவைட் - 19 என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‣ பெயர் காரணம்: • பொதுவாக வைரஸ்கள் “ RNA” மரபணுக்களை கொண்டவை. • “ கரோனா வைரஸ்” உள்ள  “ RNA”ஆனது எண்ணெய் படிப்பதினால் ஆன புரதம் மற்றும் கொழுப்பு உறையினுள் அமைந்துள்ளது. • புரதங்கள் ஆனது கூர்முனை போன்ற வடிவில் வைரஸின் புறபரப்பில் நீட்டிக் கொண்டிருந்தன. • ஒட்டுமொத்தமாக அந்த வைரஸை பார்க்கையில் “ கிரீடம்”  போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. • லத்தீன் மொழியில் “ கிரீடம்” என்பதை குறிப்பதற்கு “ கரோனா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. • அதன் காரணமாக “ கரோனா” என்ற பெயரை அந்த வைரசுக்கு சூட்டப்பட்டது. ➡ வைரஸ் உடலில் பரவும் முறை மற்றும் பெருக்கம்: ‣ கரோனா வைரஸ் உடலில் தாக்கப்பட்ட செல்லின் மூலம் பல்கி பெருக ஆரம்பிக்கிறது. ‣ பாதிக்கப்பட்ட செல்லில் இருந்து புதிதாக தோன்றும் செல்கள் அனைத்தும் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவையாகவே இருக்கும். ‣ உயிருடன் இருக்கும் ஒவ்வொரு செல்லும் இறப்பதற்கு முன் லட்சக்கணக்க

தமிழ்நாட்டின் மண் வகைகள்

➡ தமிழ்நாட்டின் மண் வகைகள்: ‣ மண் உலகின் இன்றியமையாத மற்றும் புதுப்பிக்க இயலாத வளமாகும். ‣ இரண்டு அங்குல வளமான மண் உருவாக 300 முதல் 1000 ஆண்டுகள் ஆகின்றன. ➡ வண்டல் மண்: ‣ தமிழ்நாட்டின் ஆற்று பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. ‣ தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது. ‣ சில உள்  மாவட்டங்களில் ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது. ‣ வண்டல் மண் ஒரு வளமான மண், காரணம் அதில் உள்ள தாதுக்கள். ‣ அதில் உள்ள தாதுக்கள் - சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன், பாஸ்பாரிக் அமிலம். ‣ இந்த மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலை மக்குகள் குறைவாக உள்ளன. ‣ இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண்ணாகும். ‣ நெல் , கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இந்த மண்ணில் பயிரிடப்படுகின்றன. ➡ கரிசல் மண்: ‣ தீப்பாறைகள் சிதைவு மூலம் கரிசல்மண் உருவாகிறது. ‣ இது ரீகர் மண் என்றும் அழைக்கப்படுகிறது. ‣ இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக